விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளிவந்த படம் ‘பீட்சா’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இதில் விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆனது.
இதை தொடர்ந்து விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் ஜோடி மீண்டும் புது படம் ஒன்றில் இணையவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய எஸ்.யூ.அருண்குமார் இயக்குகிறார். இப்படம் காக்கிச்சட்டைக்கு உரிய கம்பீரத்தையும், நேர்மையையும் பிரதிபலிக்கும் ஒரு போலீஸ்காரரின் யதார்த்த கதையாக உருவாக்க இருக்கிறார்கள். நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
இப்படத்தை வாசன் மூவீஸ் சார்பாக ஷான் சுதர்ஷன் முதல் படமாக இப்படத்தை தயாரிக்கிறார். மிக விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
0 comments:
Post a Comment