ரஜினி முழு நீள காமெடி படத்தில் நடிக்கிறார். இதற்கான கதை தேர்வு நடக்கிறது. ஏற்கெனவே ரஜினி நடித்த காமெடி படங்கள் வெற்றிகரமாக ஓடின.
வசூல் சாதனையும் படைத்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படங்களாகவும் இருந்தன.
குறிப்பாக ‘தில்லுமுல்லு’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ உள்ளிட்ட காமெடி படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றன. அந்த படங்கள் சாயலில் காமெடி படம் ஒன்றில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளார்.
சமீபத்திய அவரது படங்கள் அனைத்தும் ‘சீரியஸ்’ கதையம்சம் உள்ள படங்களாகவே இருந்தன. ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘கோச்சடையான்’ என ஆக்ஷன் படங்களில் நடித்தார்.
‘லிங்கா’வும் ஆக்ஷன் படமாகவே இருந்தது. எனவே இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களை கொஞ்ச காலம் ஒதுக்கி வைத்து விட்டு காமெடி படங்களில் நடிக்க தயாராகிறார்.
காமெடி கதைகள் எழுதி பிரபலமான கிரேசிமோகனை சில தினங்களுக்கு முன்பு ரஜினி சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. காமெடி படத்தில் இணைந்து பணியாற்றுவது குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஜினி நடித்த ‘அருணாச்சலம்’ படத்துக்கு கிரேசிமோகன்தான் திரைக்கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமெடி படங்கள் எடுக்கும் டைரக்டர்களில் ஒருவர் ரஜினியின் புதுப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment