விஸ்வரூபம் 2 படம் தாமதம் ஏன்? – உண்மையை மறைத்த கமல்!

‘உத்தமவில்லன்’ படத்தின் புரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார் உத்தமவில்லன் படம் பற்றி உற்சாகமாகப் பேசினார்.

தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

அப்போது விஸ்வரூபம் – 2 படம் பற்றிய கேள்விகளும் கேட்கப்பட்டன.

விஸ்வரூபம் 2 படம் தாமதமாவதற்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்தான் காரணம் என்று நேரடியாக குற்றம்சாட்டினார் கமல்.

படத்தை ரிலீஸ் செய்யாமல் தாமதப்படுத்துவதற்கு அவர் சொல்லும் காரணங்கள் எதுவும் ஏற்கும்படி இல்லை என்றும் காட்டமாக பதில் சொன்னார் கமல்.

கமல் என்கிற மிகப்பெரிய நடிகரை வைத்து தயாரித்த ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை முடிக்காமல் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தாமதப்படுத்த என்ன காரணம்?

கமல் என்கிற நடிகருக்கும் – தயாரிப்பாளருக்கும் உள்ள பிரச்சனை காரணமா?

அல்லது கமல் என்கிற வியாபாரிக்கும் – தயாரிப்பாளருக்கும் உள்ள பிரச்சனை காரணமா?


“எங்களுக்குள் நிச்சயமாக கருத்து வேறுபாடு கிடையாது.” என்று வழக்கம்போல் சமாளித்தார் கமல்.

பிறகு என்ன நினைத்தாரோ மனம் திறந்து பேச ஆரம்பித்தார்…

”இந்தப் படம் தாமதமாவதற்கு சில காரணங்களைச் சொல்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அவை நிச்சயம் ஏற்கும்படி இல்லை என்பதுதான் உண்மை. அவர் பணக்கஷ்டத்தில் இருப்பதுபோலவும் எனக்குத் தெரியவில்லை. இருந்தும் இப்படத்தை வெளியிடுவதில் ஏன் தாமதப்படுத்திகிறார் என்றுதான் புரியவில்லை” என்றார் வருத்தமாக.

விஸ்வரூபம் முதல் பாகம் வெளியானபோதே, இரண்டாம் பகுதியின் பெருமளவு காட்சிகளை எடுத்து முடித்துவிட்டார் கமல்.

ஆனால் புதிதாக படப்பிடிப்பு நடத்தினால் எவ்வளவு செலவாகுமோ அவ்வளவு பெரிய தொகையை தயாரிப்பாளரிடம் இருந்து கமல் கேட்டதால்தான் பிரச்சனை என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாகவே, விஸ்வரூபம் 2 படத்தை தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கிடப்பில் போட்டுவிட்டார் என்று படத்துறையில் பேசப்படுகிறது.

அது மட்டுமல்ல, விஸ்வரூபம் 2 படம் எனக்கு வேண்டாம்… நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கமலிடம் கேட்கும் முடிவில் இருக்கிறாராம் ஆஸ்கார் ரவி
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose