நடிகைகளின் முகத்தை மார்ஃபிங் செய்து நிர்வாண படம் வெளியிடுபவர்கள் அற்ப சந்தோசம் அடைகின்றனர் என நடிகை ஸ்ரீதிவ்யா கொதித்து போயுள்ளார்.
"வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீதிவ்யா புகழின் உச்சிக்குச் சென்றார்.
தொடர்ந்து "வெள்ளைக்கார துரை", "பென்சில்", "காக்கிசட்டை" என வரிசையாக புக் ஆகி நடித்தார்.
சமீபத்தில் வெளியான "காக்கிச் சட்டை" படமும் ஹிட் ஆகியுள்ளது. இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் ஸ்ரீ திவ்யாவின் ஆபாசமான செல்ஃபி ஒன்று இணையத்தில் உலா வந்தது.
இது பற்றி அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, சிலர் இதை உண்மை என்றும், ஒரு சிலர் மார்ஃபிங் என்றும் கூறி வந்தனர்.
இது குறித்து முதல் முதலாக மனம் திறந்துள்ளார் ஸ்ரீ திவ்யா, அதையெல்லாம் நான் கேர் பண்ணவே இல்லை என்று கூறியுள்ளார்.
பப்ளிசிட்டி இருக்கிற நடிகைகளைத்தானே இந்த மாதிரி "மார்ஃபிங்" செஞ்சு விளையாடுவாங்க. ஆனா, இதனால அவங்களுக்கு என்ன கிடைக்கப் போகுதுனுதான் தெரியலை.
இவ்ளோ கஷ்டப்பட்டு மார்ஃபிங் பண்ற நேரத்தை நல்லது பண்றதுக்காக செலவழிச்சிருக்கலாம். அதை விட்டுட்டு இந்த வேலையை மெனக்கெட்டு செஞ்சிருக்காங்க.
சரி, விடுங்க… விடுங்க… அவங்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம் இவங்க எல்லாம்…… எனவும் சாபம் விட்டுள்ளார் ஸ்ரீ திவ்யா.
0 comments:
Post a Comment