பாலிவுட்டில் அக்சயகுமார், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'கப்பார் இஸ் பேக்' என்ற திரைப்படம் இன்று வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் ஏற்கனவே தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'ரமணா' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஏற்கனவே தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படம் ஒரு மசாலா படம் என ஒருசில ஊடகங்கள் விமர்சனம் செய்ததற்கு படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளபோது, 'கப்பார் இஸ் பேக்' படத்தை மசாலா படம் என்று ஏன் கூறுகின்றார்கள் என்றே தெரியவில்லை. இது ஒரு சமூக கருத்தை வலியுறுத்தும் அழுத்தமான மெசேஜ் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம். ஒரு வெற்றி படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இதில் அடங்கியுள்ளது' என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ள கரீனா கபூர் குறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, 'கரினாவின் பகுதி மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் கதைக்கு மிக முக்கியமான பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அவருடைய நடிப்பை என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழில் சிம்ரன் நடித்த கேரக்டரில் கரீனா கபூர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்சயகுமார், ஸ்ருதிஹாசன், கரீனா கபூர், பிரகாஷ்ராஜ், சுமன் தல்வார், மற்றும் பலர் நடித்துள்ள கப்பார் இஸ் பேக்' திரைப்படத்தை க்ரிஷ் இயக்கியுள்ளார்.
0 comments:
Post a Comment