இன்று விவேக் மிஸ் செய்யும் இரண்டு விஷயங்கள்
அஜீத்தின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் காமெடி நடிகர் விவேக் என்பது கோலிவுட்டில் உள்ள பலருக்கு தெரியும். அஜீத்துக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய காதல் மன்னன், வாலி, பரமசிவன், கிரீடம் போன்ற படங்களிலும், சமீபத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்திலும் விவேக் அஜீத்துடன் நடித்துள்ளார்.
அஜீத்தின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் விவேக் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ பிறந்த நாள் சொல்வதை ஒரு வழக்கமாக இத்தனை ஆண்டுகளாக வைத்திருந்தார். ஆனால் இவ்வருடம் அவர் இரண்டு விஷயங்களை மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.
ஒரு முக்கிய வேலையாக மஸ்கட் செல்லவிருப்பதால் இன்று வெளியாகவுள்ள 'வை ராஜா வை' படத்தை ஆடியன்ஸ்களுடன் இணைந்து பார்க்க வேண்டிய சந்தர்ப்பத்தை இழப்பதாகவும், அதே நேரத்தில் அஜீத்துக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் வாய்ப்பையும் இழப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் மஸ்கட்டில் இருந்து போன் மூலம் அஜீத்துக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
விவேக் கதாநாயகனாக நடித்த 'பாலக்காட்டு மாதவன்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment