தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் அஜித் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இவர் தனது மன்றங்களை கலைத்தாலும் ரசிகர்கள் இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இன்று ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளும் இன்று நடப்பட்டன.
சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கினர். 150 பேர் ரத்த தானம் செய்தனர். மேலும் பல இடங்களில் அன்னதானம் செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment