கலவரம் ஏற்பட்டால் கூட்டம் கூடாமலிருப்பதற்காக ஒரு சட்டம் இருக்கும் அல்லவா? அதை மீறி கூடினால் போலீஸ் கூட தடியடி நடத்துமே, அந்த சட்டத்தின் பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது தமிழில். முன்னாள் ரேடியோ ஜாக்கி ஒருவர்தான் இந்த படத்தின் ஹீரோ. அவர் சிவ சிவா என்று இருந்தாலும், படத்தின் தயாரிப்பாளருக்குதான் ஜில்லுன்னு ஏகாந்தமா இருக்கணும்னு ஆசை வந்ததாம். சரி வரட்டும்… தயாரிப்பாளர்னா இது கூட இல்லேன்னா எப்படி?
தப்பில்லதான். அதுக்காக கண்ணடிச்சு வராதவங்களை கைய புடிச்சு இழுத்தா வந்துருவாங்களா என்ன? அங்குதான் பிரச்சனையாம் படம் துவங்கி ஓரளவுக்கு வளர்ந்து வந்தாலும், முதலில் நடிக்க வந்த ஹீரோயின் ஓட்டமெடுத்த கதைதான் இப்போது கசிந்திருக்கிறது. தேனீர் விடுதியில் தங்கிய ஹீரோயின் அவர். பார்க்க ஜில்லென்றுதான் இருப்பார். மலையாள வரவு வேறு. கேட்க வேண்டுமா? செம மூட் ஆகிவிட்டாராம் தயாரிப்பாளர். ஷுட்டிங் துவங்கி இரண்டொரு நாட்கள் அமைதியாக இருந்தவர், அதற்கப்புறம் சும்மாயில்லாமல், ‘என் படத்து ஹீரோயினெல்லாம் என்னோட அப்படி இப்படி இருந்ததால்தான் இன்னைக்கு பெரிய இடத்துக்கு வந்திருக்காங்க. அந்த அதிர்ஷ்டம் உனக்கு வேணாமா?’ என்றாராம்.
எவ்வித யோசனைக்கும் இடம் வைக்காத ஹீரோயின், ‘ம்ஹும்… அப்படியெல்லாம் சினிமாவுல பெரிய இடத்தை பிடிக்கணும்ங்கற ஆசையெல்லாம் எனக்கு இல்ல. அதனால் ஸாரி…’ என்று கூறிவிட்டு நடிப்பில் மூழ்கி விட்டார். அதற்கப்புறம் சும்மாயிருக்க வேண்டியதுதானே? சி-ய்ய்ய் வா… என்று வற்புறுத்தினாராம். கடுப்பான ஹீரோயின் ‘இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்’ என்று ஓடியே போய்விட்டார். அதுவரை எடுத்த காட்சிகளை இப்போது வேறொரு ஹீரோயினை வைத்து ரீ ஷுட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர் இடத்தில் இப்போது நடித்துக் கொண்டிருப்பவர் ஓவியா!
C ன்னா Come என்பதாகவும், V என்றா Vaa என்பதாகவும் அர்த்தம் வைத்திருக்கிறார் போலும் அந்த தயாரிப்பாளர்! மூடி மூடி வச்சாலும் Dumar னு ஒடைஞ்சு போச்சே எல்லாம்!
0 comments:
Post a Comment