ஒரு படத்தின் ஹீரோ யார் என்பது குறித்து கவலைப்படாமல், தனக்கு சவாலான வேடமாக இருக்கின்றதா என்பதை மட்டுமே பார்த்து படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, தற்போது ஜீவாவுடன் நடிக்கவுள்ள 'திருநாள்' படத்திலும் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார்.
16 வயதினிலே' படத்தில் வரும் ஸ்ரீதேவி, கடலோரக்கவிதைகள் ரேகா முதல் தமிழ் சினிமா எத்தனையோ டீச்சர் கேரக்டர்களை பார்த்துள்ளது. இருப்பினும் இதுவரை யாரும் நடித்திராத எல்.கே.ஜி குழந்தைகளுக்கான டீச்சர் வேடத்தில் நயன்தாரா, திருநாள் படத்தில் நடித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் பி.எஸ்.ராம்நாத் கூறும்போது, 'கோலிவுட் ஆடியன்ஸ்களுக்கு நயன்தாரா கேரக்டர் முற்றிலும் புதிதாக இருக்கும். இந்த படத்தில் கிண்டர்கார்டன் பள்ளி டீச்சராக நயன்தாராவும், வில்லேஜ் ரவுடியாக ஜீவாவும் நடிக்கின்றனர். இருவருடைய கேரக்டர்களுமே இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வகையில் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற படங்களில் இருந்து கண்டிப்பாக இந்த படம் மாறுபட்டதாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.
இந்தபடத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் கும்பகோணம் செல்லவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment