அவுகளுக்கு கல்யாணமாமே..!?

டிவி செய்திவாசிப்பாளருக்கு கல்யாணம்... வில்லியின் சின்னத்திரை ரிட்டர்ன்... இசை தொகுப்பாளினியின் ஆசை என இன்றைய சின்னத்திரை திரை மறைவில் சுவாரஸ்யமான செய்திகள் இடம் பெற்றுள்ளன. சின்னத்திரை சீரியலை பார்ப்பதை விட இதுபோன்ற கிசுகிசு படிப்பதில்தான் வாசகர்களுக்கு சுவாரஸ்யம் அதிகம். எனவே சத்தம் போடாம கம்முன்னு படிங்க...

அவகளுக்கு கல்யாணமாமே...

 அந்த தலைமுறை டிவியில் துறு துறு செய்திவாசிப்பாளராக இருந்த ப்ரியமானவர் நட்சத்திர தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்யாண சீரியலில் நடித்து வருகிறார். செய்திவாசிப்பதை விட சீரியல் நடிப்பு சூப்பர் என்று பாராட்டுக்கள் குவியவே நகைக்கடை விளம்பரம் ஒன்றிலும் தலைகாட்டி வருகிறார். விரைவில் அவருக்கு டும் டும் டும் கொட்டப்போகிறார்களாம். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த மாப்பிள்ளை என்பது கூடுதல் தகவல். 

அண்ணாச்சி நீங்களுமா? 
சூரிய தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சிகளை நடத்திவரும் அண்ணாச்சிக்கு குழந்தைகள் மத்தியில் தனி பிரியம். குழந்தைகளின் பேச்சுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்டே. இதுநாள்வரை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இருந்து புதிய மாற்றம் செய்துள்ளது நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு. 

சிறப்பு விருந்தினராக நடிகரை வரவழைத்து அவர்களுடன் குழந்தைகளை பேச வைக்கின்றனர். குழந்தைகளின் பேச்சுக்கு சிறப்பு விருந்தினரும் கமெண்ட் கொடுக்கிறார். கடந்த வாரம் பெரிய நாட்டாமையின் மகன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இது நட்சத்திர டிவி நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்த குழந்தைகள் நிகழ்ச்சியை உயர்த்த வேண்டும் என்பது தலைமையின் உத்தரவாம்.

புவன நடிகையின் வில்லி ஆதிக்கம் 
சின்னத்திரையில் அறிமுகமாகி சீரியலில் வில்லியான புவன நடிகை சினிமாவில் காலூன்றினார். வழக்கு வம்பு என்று சிக்க அரசியல் பக்கம் எட்டிப்பார்த்தார். கொஞ்சகாலம் மீடியா கண்களில் படாமல் இருந்த புவன நடிகை சூரிய தொலைக்காட்சி சீரியல்களில் மீண்டும் வில்லியாக தலைகாட்டத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் மறுபடியும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கைதானாம்.

சங்கீத தொகுப்பாளினியின் ஆசை 

அந்த இசைச்சேனலின் சங்கீதமான தொகுப்பாளினிக்கு மதுரை பூர்வீகமாம். படித்த உடன் சென்னைக்கு பேக் அப் ஆனவருக்கு ஐடி வேலையோடு அம்மணிக்கு காம்பயர் வேலையும் கிடைத்துள்ளது. சூர்ய தொலைக்காட்சியின் இசைச்சேனலில் தற்போது காம்பயர் வேலை செய்யும் சங்கீத தொகுப்பாளினிக்கு ரியாலிட்டிஷோ, விருது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் ஆசையாம்... 

நெகிழ வைத்த தளபதி 
நகைக்கடை விளம்பரத்தில் தளபதி நடிகர் தன் கார் டிரைவரின் மகள் ஐ.ஏ.எஸ் பாஸ் செய்ததற்காக நகை வாங்கி கொடுக்கிறார். முதலாளி - தொழிலாளி உறவை பலப்படுத்துவதாக அமைந்திருந்த இந்த விளம்பரம் எடுக்கப்பட்ட விதம், நேர்த்தி ஆகியவை மனதுக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாராட்டுகின்றனராம் ரசிகர்கள்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose