கறுப்பு பூனை! : கிசு கிசு
கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த போது, சம்பள விஷயத்தில் அடக்கி வாசித்து வந்த ராய் நடிகை, இப்போது, அதிரடி வேடங்களில் நடிப்பதை தொடர்ந்து, தன் படக்கூலியை தாறுமாறாக உயர்த்தியுள்ளார். இதனால், பட்ஜெட் நடிகை என்று அவரை ஒப்பந்தம் செய்யச் சென்ற சில தயாரிப்பாளர்கள் ஓட்டம் பிடித்து விட்டனர்.
தாரா நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த பிரியாணி நடிகர், இப்போது, இன்னொரு மலையாள நடிகைக்கு, 'ரூட்' விட்டு வருகிறார். அதோடு, தான் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கவும், மேற்படி நடிகைக்கு தூது விட்டுள்ளார். ஆனால், நடிகருடன், 'டூயட்' பாடினால், 'கிசுகிசு'வில் சிக்க நேரிடும் என்று, அந்த மலையாள நடிகை டேக்கா கொடுத்து வருகிறார்.
தளபதி நடிகருடன் நடிக்கும் படத்தில் பப்ளிமாஸ் நடிகையை, ஹாசன் நடிகை ஓரங்கட்டி விட்டதால், அவரது அதிரடி நடிப்பினால், அவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தி விட்டார் இயக்குனர். இதனால், படம் திரைக்கு வரும் போது, தான் டம்மியாக்கப்பட்டிருப்போமோ என்று உள்ளூர அச்சத்தில் இருக்கிறார் பப்ளிமாஸ் நடிகை.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment