அஜித், வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிய மங்காத்தா படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனால் ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடமும், அஜித்திடமும் மங்காத்தா 2ம் பாகம் எப்போது வரும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மே 1ம் தேதி அஜித் தன்னுடைய 44வது பிறந்த நாளை கொண்டாடினார். எனவே, அஜித்திற்கு போன் பண்ணி வெங்கட் பிரபு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ரசிகர்கள் ‘மங்காத்தா 2’ எப்போது ஆரம்பமாகும் என்று கேட்கிறார்கள். நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுது சொல்லுங்கள் நாம் ‘மங்காத்தா 2’ பற்றி பேசுவோம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு அஜித் எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் சாதித்துள்ளார். வெற்றியை விட தோல்வியையே அதிகம் சந்தித்துள்ளார் அஜித். ஆனாலும் அவரது ரசிகர்கள் எப்போதும் அஜித்துக்கு துணையாகவே இருந்துள்ளனர். அப்படிபட்ட தனது ரசிகர்களின் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுந்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment