சிவாவை திணறவிட்ட ரசிகர்கள் - விமான நிலையத்திலிருந்து பின் வழியாக வெளியேறிய சிவா
இசையமைப்பாளர் இமானின் இசைநிகழ்ச்சி நாளை மலேஷியாவில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக தன் குழுவினருடன் மலேஷியா சென்றுள்ளார், இமான்.
தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என்று சிவகார்த்திகேயனை அழைத்திருக்கிறார் இமான்.
இவர் நடித்த படங்களின் வெற்றிக்கு... முக்கியமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இமான். அவர் இசையமைத்த ஊதாகலரு ரிப்பன் பாடல்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தையே உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ரஜினிமுருகன் படத்துக்கும் இமான் தான் இசையமைக்கிறார். இதை எல்லாம் மனதில் வைத்து இமானின் அழைப்பை தட்ட முடியாமல் அவருடன் மலேஷியா சென்றுள்ளாராம், சிவகார்த்திகேயன்.
மலேஷியாவுக்கு சிவகார்த்திகேயன் வருவதை அறிந்த அங்குள்ள ரசிகர்கள் கோலாலம்பூர் விமானநிலையத்தில் அதிகாலை முதலே காத்திருந்துள்ளனர்.
அதுமட்டுமல்ல, உங்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ட்வீட் செய்து சிவகார்த்திகேயனை திணற வைத்துவிட்டனர்.
இதை அறிந்த சிவகார்த்திகேயன் விமானநிலையத்திலிருந்து வேறு வழியாக வெளியே சென்றுவிட்டார். சிவகார்த்திகேயனின் செயலால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனராம்.
Labels:
cinema,
cinema.tamil,
sivakarthikeyan
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment