லிங்கா படத்தின் பிரச்சனை ரஜினியை ரொம்பவே கஷ்டத்தில் ஆழ்த்திவிட்டது. இதனால் சில மாதங்கள் மௌனமாக இருந்த ரஜினி தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.
ஷங்கர் எந்திரன் 2ம் பாகத்தை ஷாருக்கானை வைத்து எடுக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது எந்திரன் 2ம் பாகத்தில் ரஜினியே நடிக்க போவதாக செய்திகள் கசித்துள்ளது.
கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் ரஜினி நடிப்பதாக இருந்தால் 200 கோடி பட்ஜெட்டுக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் எந்திரன் இரண்டாம் பாகத்திற்கு நம்பர் ஒன் என்ற தலைப்பையும் முடிவு செய்திருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment