நார்வே திரைப்பட விழாவில் ‘காவியத்தலைவன்’ படத்துக்கு 6 விருதுகள் வழங்கப்பட்டன.நார்வே திரைப்பட விருதுகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்கான 6-வது நார்வே திரைப்பட விழா விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டது. இதில், வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்துக்கு, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர்(சித்தார்த்), சிறந்த நடிகை (வேதிகா), சிறந்த துணை நடிகர் (நாசர்), சிறந்த துணை நடிகை (குயிலி), சிறந்த பாடகர் (ஹரிச்சரண்) ஆகிய 6 விருதுகள் கிடைத்தன.
மேலும் சிறந்த படத்துக்கான விருது ‘குக்கூ’ வுக்கும் இசையமைப்பாளர் விருது சந்தோஷ் நாராயணனுக்கும் கிடைத்தது. சிறந்த பாடலாசிரியர், யுகபாரதி, ஒளிப்பதிவு, வெற்றிவேல் மகேந்திரன் (கயல்), சமூகப் படத்துக்கான விருது ‘சிகரம் ெதாடு’ கவுரவ் உட்பட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment