ஜோதிகா எப்போது நடிக்க வருவார் என லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் ஏக்கங்களை கண்டு திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளிவரும் படம் தான் 36 வயதினிலே.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு பிரபல தொலைக்காட்சியில் கலந்து கொண்டார். இதை டிடி தொகுத்து வழங்க, 16 வருடங்களுக்கு பிறகு உங்களுக்காக தான் இந்த பேட்டி கொடுக்கின்றேன் என ஜோதிகா கூறினார்.
ஏனெனில் டிடி நிகழ்ச்சி என்றால் அனைவரும் விரும்பி பார்ப்பார்கள், அதனால் நீ போக வேண்டும் என்று சூர்யா கூறியதாக ஜோதிகா தெரிவித்தார். மேலும், சமூகத்தில் ஒரு பெண் தன் கணவர் பெயருக்கு மட்டும் மரியாதை செலுத்தினால் மட்டும் போதாது. தன்னை இத்தனை நாட்கள் வளர்த்து அம்மா, அப்பா வைத்த பெயருக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறினார்.
மேலும், ஜோதிகா தன்னுடன் நடித்த விஜய் பற்றி கூறுகையில் என் வாழ்வில் நான் நடிகையாக நடித்து ஹிட் ஆன முதல் படம் விஜய்யின் குஷி தான், அஜித் மிகவும் கிளாஸிக் என்று கூறினார்.
0 comments:
Post a Comment