இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, அப்படியிருக்க அனைத்து தொலைக்காட்சியும் தங்கள் TRP யை எகிற வைக்க, இவரின் படங்களை ஒளிபரப்பியோ, இவருக்காக ஸ்பெஷல் நிகழ்ச்சிகளை நடத்தியோ ஆதாயம் தேடிக் கொள்வார்கள்.
ஆனால், இந்த முறை எப்போதும் விஜய்யிடம் நல்ல உறவில் இருக்கும் அந்த தொலைக்காட்சி விஜய்க்கு கிடைக்க வேண்டிய விருதை வேறு ஒரு நடிகருக்கு கொடுத்தது என கூறப்படுகிறது.
கடந்த வருடம் வசூலில் நம்பர் 1 என்றால் கத்தி படம் தான் என அனைவருக்கும் தெரியும், அந்த வகையில் ஏன் விஜய்க்கு இப்படத்திற்காக விருது கொடுக்கவில்லை என பல கேள்விகள் எழுந்தாலும், எல்லாம் ஒரு வகை அரசியல் தான் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment