கடந்த சில வாரங்களுக்கு முன் ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தூக்குமர பூக்கள் என்ற படத்தை ஜெய விஜய சாமுண்டீஸ்வரி புரொடக்ஷன் ஸ்காட் மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கிறதாம்.
இதில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனராம். யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். இப்படத்திற்கு கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை, வசனம் எழுத இரட்டையர்களான வி.ஆர்.காளிதாஸ், வி.அகஸ்டின் இயக்குகிறார்களாம். இப்படத்திற்கு சுனில் சேவியர் இசையமைக்க, பாபு ராஜேந்திரன் ஔிப்பதிவு செய்கிறாராம்.
செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மானிதாபமின்றி, துன்புறுத்தி, உடல் உறுப்புகளை சிதைத்து கொன்ற கொடூரத்தின் பின்னணி என்ன? என்ற உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தவே இப்படத்தை எடுக்கிறோம் என இயக்குநர்கள் கூறுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் சம்பவம் நடந்த இடத்திலேயே நடத்துகிறார்களாம்.
0 comments:
Post a Comment