ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து கடந்த 2002ம் ஆண்டு திரைக்கு வந்த படம் ‘ரமணா’. இப்படம் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் ஏற்கனவே ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. தற்போது இந்தியில் ‘கப்பர் ஈஸ் பேக்’ பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. அக்ஷய்குமார், ஸ்ருதி ஹாசன், கரீனா கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு பட டைரக்டர் கிரிஷ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ‘ஷோலே’ படத்தில் இடம்பெற்ற வில்லன் கதாபாத்திரமான கப்பர் என்ற பெயரை டைட்டிலாக வைத்திருப்பதால் பலருக்கு குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து அக்ஷய்குமார் கூறியது:
இப்படத்தில் போலீஸ் அதிகாரிக்கு ஹீரோ ஒரு கடிதம் எழுதுவார். அதில் சொந்த பெயரை பயன்படுத்தாமல் கப்பர் என்ற பெயரை பயன்படுத்துவார். அதுதான் இந்த படத்துக்கும் ஷோலே வில்லன் பெயருக்கும் உள்ள சம்பந்தம். வேறு எதுவும் இல்லை. இப்படத்துக்கு ஒப்பந்தம் ஆகும்போதே இயக்குனர் ஒரு கண்டிஷன் போட்டார். விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ படத்தை பார்க்கக்கூடாது என்பதுதான் அது. அதற்கு காரணம் அப்படத்தை பார்த்தால் விஜயகாந்த் நடித்த ஸ்டைல்தான் எனக்கும் வரும் என்பதால் அதை தவிர்க்க கேட்டார். எனவே அப்படத்தை பார்ப்பதை தவிர்த்துவிட்டேன் என்றார்.
0 comments:
Post a Comment