ரஜினி படம் வெளியாகும் நாள் மட்டுமல்ல, அறிவிக்கப்படும் நாளும் கூட விசேஷமானதுதான். லிங்காவுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படம் குறித்து ஏராளமான செய்திகள் கடந்த நான்கு மாதங்களாக வலம் வந்து கொண்டிருந்தன. அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், அவரது புதுப்பட அறிவிப்பு உழைப்பாளர் தினமான இன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு குறித்து பல்வேறு யூகங்கள்.
இந்தப் படம் எந்திரன் 2 ஆ அல்லது வேறா என்பதற்கு இன்று விடை கிடைத்துவிடும் என்கிறார்கள். ஷங்கரின் வழக்கமாக காம்பினேஷன் இந்தப் படத்திலும் தொடரும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தை லைக்கா நிறுவனமும் அய்ங்கரனும் கூட்டாகத் தயாரிக்கவிருக்கிறார்கள். ரஜினியின் எந்திரன் படத்தின் முதல் தயாரிப்பாளரும் அய்ங்கரன்தான். பின்னர்தான் அந்தப் படம் சன் பிக்சர்ஸ் கைக்குப் போனது நினைவிருக்கலாம்.
0 comments:
Post a Comment