கத்தி படத்தை அடுத்து அகிரா என்ற ஹிந்திப்படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் கதையை தழுவி எடுக்கப்படும் படம் இது. அதாவது மௌனகுரு படத்தில் அருள்நிதி நடித்த ஹீரோ வேடம் ஹிந்தியில் ஹீரோயினாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வேடத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். இவர் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்தவர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹாவுடன் அவரது தந்தை சத்ருகன் சின்ஹாவும் நடிக்கிறார்.
அகிரா படத்தில் இவர்கள் அப்பா - மகளாகத்தான் நடிக்கிறார்கள். ஆனால் இருவரும் ஒன்றாக தோன்றும் காட்சிகள் இல்லை. சோனாக்ஷி சின்ஹாவின் ப்ளாஷ்பேக் காட்சியில் சிறு வயது காட்சிகள் வருகின்றன. இந்த காட்சியில் குழந்தை நட்சத்திரம் ஒருவர் நடிப்பதால் அந்த குழந்தையுடன்தான் சத்ருகன் சின்ஹா நடிக்க இருக்கிறார். சிறுவயதிலேயே தனது தந்தையை இழக்கும் சோனாக்ஷி சின்ஹா, வாழ்க்கையில் தனக்கு வரும் சவால்களை எப்படி சமாளித்து வெற்றி காண்கிறார் என்பது தான் அகிரா படத்தின் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, புனை, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.
0 comments:
Post a Comment