திருப்பாச்சி படத்தில் விஜய்யின் நண்பனாக காமெடி ரோலில் நடித்திருந்தவர் பெஞ்சமின். படம் முழுக்க விஜய்யுடன் நடித்தாலும், அவருக்கு திருப்பாச்சி படத்திற்கு பிறகு பெரிய ஹீரோக்களின் படங்களே கிடைக்கவில்லை.
சில சின்ன படங்களில் நடித்து வந்த பெஞ்சமின் காலபோக்கில் மார்க்கெட்டில் இருந்தே காணாமல் போய்விட்டார். எனவே விஜய்யை சந்தித்தும் தனக்கு சான்ஸ் தருமாறு கேட்டாராம்.
ஆனால் விஜய்யோ நான் நடிக்கும் படங்களில் யார் நடிக்க வேண்டும் என்று டைரக்டர்கள் தான் தேர்வு செய்வார்கள் என்று கூறியுள்ளார்.
பெஞ்சமினும் விஜய் நடித்த படங்களில் நடிக்க முயற்சி எடுத்திருக்கிறார், ஆனால் யாரும் கைகொடுக்கவில்லை.
தற்போது பெஞ்சமின் ஓஹோ என்ற படத்தில் தனி காமெடியனாக நடித்துள்ளாராம். இப்படத்திற்கு பிறகு தன்னுடைய நடிப்பு ரசிகர்களால் அதிகம் பேசப்படும் என்று நம்புகிறாராம்.
0 comments:
Post a Comment