நீதிமன்ற தடை விவகாரம். ஸ்ருதி தரப்பின் விளக்கம்
கார்த்தி மற்றும் நாகார்ஜுனா நடிக்கும் இரு மொழி படம் ஒன்றில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதால், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'பிக்சர் ஹவுஸ் மீடியா' நீதிமன்றம் சென்றதாகவும், ஸ்ருதிஹாசன் மறு உத்தரவு வரும்வரை எந்த புதிய படங்களிலும் ஒப்பந்தம் செய்யப்பட கூடாது என நீதிமன்றம் உத்தரவு இட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த தகவலை ஸ்ருதிஹா
சன் தரப்பு மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ருதிஹாசனுக்கோ அல்லது ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கோ இதுவரை எந்தவிதமான சட்ட நோட்டீஸ்களும் வரவில்லை என்று ஸ்ருதிஹாசனின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கார்த்தி நடிக்கும் படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதால், பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் வழக்கு தொடர முயற்சிகள் செய்து கொண்டிருப்பதாகவும், ஆனால் இதுவரை எவ்வித வழக்கும் நீதிமன்றத்தில் பதிவாகவில்லை என்றும் ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருந்த கார்த்தி-நாகார்ஜுனன் படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனை தற்போதைக்கு முடிந்துவிட்டதாகவே தெலுங்கு திரையுலகில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றது.
Labels:
cinema,
cinema.tamil,
suruthi
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment