சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புலி படத்தின் படப்பிடிப்பு சென்னை, தலக்கோணம் ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து, தற்போது கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் மீண்டும் தலக்கோணம் செல்கின்றனராம். இங்கு விஜய் மற்றும் ஹன்சிகா பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது.
அதேசமயம் புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் தமிழ் புத்தாண்டன்று வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment