சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துவரும் படம் புலி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி, தமிழ் புத்தாண்டன்று வெளியாகவிருப்பதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.
இந்நிலையில், விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் 10 எண்றதுக்குள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரும் இதே நாளில் வெளியாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நேபாள் பகுதியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதே நாளில் தான் அஜித் படமும் ஆரம்பமாக உள்ளதாம்.
0 comments:
Post a Comment