சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த லிங்கா எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், ஒரு சில விநியோகஸ்தர்கள் ரஜினி பணத்தை திருப்பி தரவேண்டும் என்று போராட்டத்தில் குதித்தனர்.
ரஜினியும் ஒரு மனதாக ரூ 10 கோடியை தர, தற்போது பிரச்சனையே இந்த பணத்தை பிரிப்பதால் தான். திருநெல்வேலி பகுதியில் பல திரையரங்குகளில் ஐய்யப்பன் என்பவர் தான் லிங்கா படத்தை வெளியிட்டுள்ளார்.
இதற்காக முன் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் திருப்பி கேட்க, லிங்கா நஷ்ட ஈடு வந்தவுடன் தருகிறேன் என்று கூறி வந்தார். ஆனால், அவர் கைக்கு பணம் இன்னும் வராததால் விரக்தியில் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment