வாரிசு நட்சத்திரங்களின் காலம் இது, முன்னாள் முன்னணி நட்சத்திரங்கள் இப்போது அவரவர் வாரிசுகளை திரையுலகில் இறக்கி விட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர்தான் தங்களது சொந்தத் திறமைகளாலும் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் தடுமாறிக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால், எல்லாவற்றையும் ஒரே ஒரு வெற்றி மாற்றி விடும். இங்கு வெற்றி பெறுபவர்களை நோக்கித்தான் வெளிச்சம் பாயும். தோல்வியை சந்தித்து விட்டால் அவ்வளவுதான் விமர்சித்துத் தள்ளி விடுவார்கள்.
'ஷமிதாப்' படத்தில் அறிமுகமான கமல்ஹாசனின் இளைய வாரிசு அக்ஷராவுக்கு அப்படித்தான் அமைந்து விட்டது. அறிமுகமான முதல் ஹிந்திப் படமே அவருக்கு படு தோல்வியாக அமைந்ததால் அவரைப் பற்றி யாருமே பாராட்டித் தள்ளவில்லை, மாறாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டார் அக்ஷரா. அதிலும் அவர் தடுமாற்றத்துடன்தான் 'கேட் வாக்' செய்தார் என விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அதிலும் அவர் அணிந்த ஆடையைப் பற்றிக் கூட பேஷன் விமர்சகர்கள் விமர்சித்துள்ளார்களாம். அக்கா ஸ்ருதிஹாசன் அளவிற்கு அக்ஷரா இல்லை என்று அவர்கள் வெளிப்படையாகவும் சொல்ல ஆரம்பித்து விட்டார்களாம். கலைஞானியின் வாரிசு ஆயிற்றே அப்படியே விட்டுவிடுவாரா என்ன ? அடுத்தடுத்து வாய்ப்புகளில் அக்ஷரா அசத்துவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகத் தகவல்.
0 comments:
Post a Comment