தற்கொலை செய்திருப்பேன்.... சின்மயி 'ஷாக்'!


ட்விட்டரில் தன்னைப்பற்றி பரப்பப்பட்ட அவதூறு செய்திகளுக்கு மன உறுதி அற்றவளாக இருந்திருந்தால் தான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்று பிரபல பாடகி சின்மயி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஒரு தெய்வம் தந்த பூவே, சஹானா, கிளிமாஞ்சாரோ உள்பட ஏராளமான பாடல்கள் பாடி இருப்பதுடன், நயன்தாரா, தமன்னா, சமந்தா, சமீரா ரெட்டி போன்ற நடிகைகளுக்கு பல படங்களில் டப்பிங்கும் பேசி இருப்பவர் சின்மயி.

கடந்த 2012ஆம் ஆண்டு ட்விட்டரில், சின்மயி குறித்து அவதூறாக செய்தி பரப்பினார், அவருக்கும் கடும் மன உளைச்சலைக் கொடுத்தார் என்ற புகாரில் சென்னை ஆடை வடிவமைப்புக் கல்லூரிப் பேராசிரியர் சரவணகுமார் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறிய உச்சநீதிமன்றம் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ வை ரத்து செய்து உத்தரவிட்டது.

இது குறித்து கருத்து கூறியுள்ள பாடகி சின்மயி, நான் எப்போதுமே சுதந்திரமாக பேசுவதற்கு ஆதரவு தருவேன். அதேசமயம் சைபர் கிரைம் குற்றவாளிகள் மற்றும் அவதூறு பரபரப்புபவர்களும் ஆபத்தானவர்கள் என்பதை சட்டம் உருவாக்குபவர்களும், மக்களும் உணர வேண்டும்.

மனதளவில் நான் உறுதியாக இல்லாமல் இருந்திருந்தாலோ, எனது அம்மா மற்றும் நலவிரும்பிகளும் ஆதரவுகாட்டாமல் இருந்திருந்தால் ட்விட்டரில் என்னைப்பற்றி சிலர் தவறாக சித்தரித்திருந்ததை கண்டு நான் தற்கொலை செய்திருப்பேன்.

ஒருசிலர் திடீரென்று பிரபலமாக வேண்டும் என்பதற்காக யாரையாவதுபற்றி தவறாக சொல்லும் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதை மற்றவர்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். படித்தவர்களும், பண்பாடு மிக்க தமிழர்களும் ட்விட்டரை பார்த்துக்கொண்டு மட்டும்தான் இருப்பார்கள். நாம் சட்ட உதவியை நாட வேண்டும்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose