ஸ்டண்ட் இயக்குனராக மாறிய பிரபல நடிகர்


ஸ்டண்ட் இயக்குனர்கள் ஒருசிலர் நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் மாறி வரும் நிலையில் ஒரு பிரபல ஹீரோ ஸ்டண்ட் இயக்குனராக மாறி வருகிறார். ஆம் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா அடுத்த நடிக்கவுள்ள திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனர் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இயக்குனர் ஸ்ரீனிவைத்லா இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ராம்சரண்தேஜா, இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக நடிக்கவுள்ளார். இந்த கேரக்டருக்காக அவர் தினமும் நான்கு மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதாகவும், இயக்குனர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் உடல் எடையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காகவே ராம்சரண் தன்னுடைய பண்ணை வீட்டில் உடல் எடையை கூட்டுவதற்கான முயற்சி எடுத்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால் அதற்குள் இயக்குனர் எதிர்பார்க்கும் வெயிட்டை அடைந்து விட வேண்டும் என அவர் மும்முரமாக இருப்பதாகவும் டோலிவுட்டில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் ராம்சரண் தேஜாவுக்கு ஜோடியா ராகுல் ப்ரித்திசிங் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் டிவிவி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose