இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இப்படம் கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கிறது. சென்னையில் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்பதை படத்தின் காட்சிகளின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
விழாவில் பேசிய பேரரசு, படக்குழுவினரை வாழ்த்திவிட்டு தான் சொந்த ஊரிலிருந்து 20 கீ.மீ. சைக்கிளில் சென்று முரட்டுக்காளை படப்பிடிப்பு பார்த்த அனுபவத்தைக் கூறினார். எஸ்.பி.முத்துராமனின் எளிமையைப் பற்றிக் குறிப்பிட்டவர். “திறமை உள்ளவர்களுக்கு கர்வம். தலைக்கனம் இருக்கலாம். அது கர்ப்பிணிப்பெண்ணின் வயிறைப் போல மரியாதை தரக்கூடியது. திறமையில்லாதவர்களின் தலைக்கனம் என்பது தொப்பை பெண்ணின் வயிறு போன்றது. தொப்பையை ரசிக்க முடியுமா?
திறமையும் இருந்து கர்வமும் இல்லாதவர்கள் இலியானாவின் வயிறு, இடுப்பு போன்றவர்கள். இலியானாவின் இடுப்பு மெலிதாக இருக்கும் ரசிக்கத் தக்கது. அப்படி ரசிக்கத் தக்க ஒருவர்தான் எஸ்.பி.முத்துராமன் அவர்கள். என்றும் எளிமைக்குச் சொந்தக்காரர். நான் ஏவிஎம்மில் படப்பிடிப்பில் இருந்த போது அங்கு வந்து என்னைப் பாராட்டினார். பாராட்டுபவர்களைச் தேடிச் சென்று பாராட்டும் அந்த உயர்ந்த பண்பை அவரிடம் கற்றுக் கொண்டேன்.’ ‘என்றார்.
ஒளிப்பதிவு ராஜன்திலக், இசை, விஜய்கிருஷ்ணா, கதை திரைக்கதை வசனம் இயக்கம் சந்த்ரா.
படப்பிடிப்பு முடிந்து ‘கைபேசி காதல்’திரையியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.
0 comments:
Post a Comment