திக்கெட்டிலுமிருந்து பொழியும் வாழ்த்துகளும் , பாராட்டுகளும் தேசிய விருது பெற்ற ‘ குற்றம் கடிதல்’ திரைப்படக் குழுவினரை மகிழ்ச்சி என்ற வார்த்தையையும் மிஞ்சி பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பெருமிதத்திற்கும் , பெருமகிழ்ச்சிக்கு கூடுதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பாளர் JSK சதிஷ்குமார் மற்றும் இயக்குனர் பிரம்மா இருவரையும் தொடர்புக் கொண்டு தேசிய விருதை பெற்றமைக்கு தந்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
” இந்த நொடிப்பொழுது மிக சந்தோஷமாக உள்ளது. இந்திய திரையுலகின் தலைசிறந்த கலைஞர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் திறமைசாலிகளை கண்டறிந்து பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதனால்தான் அவர் என்றும் சூப்பர் ஸ்டார். ” என்றுக் கூறினார் தயாரிப்பாளர் JSK சதிஷ் குமார் பெருமிதத்துடன் கூறினார்.
0 comments:
Post a Comment