அஜீத்துடன் ஏற்பட்ட முதல் அறிமுகம். சரண்



அஜீத் நடித்த 'காதல் மன்னன்' படத்தில் இயக்குனராக அறிமுகமான சரண், அதன்பின்னர் அமர்க்களம், அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், மோதி விளையாடு, போன்ற பல படங்களை இயக்கினார். தற்போது ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் 'ஆயிரத்தில் இருவர்' என்ற படத்தை தற்போது இயக்கி வரும் நிலையில் ஒரு தனியார்  வானொலியில் பேட்டியளித்த சரண், முதன்முதலாக தல அஜீத்தை சந்தித்து அறிமுகமான மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இயக்குனர் வசந்த் இயக்கிய 'ஆசை' படத்தின் படப்பிடிப்பில்தான் அஜீத்தை முதன்முதலில் சந்தித்தபோது தான், தன்னுடைய முதல்படமான 'காதல் மன்னன்' படத்தின் கதைக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என தான் கருதியதாகவும், பின்னர் தன்னுடைய நண்பர் நடிகர் விவேக் மூலம் முதன்முதலாக அஜீத்தை அவரது வீட்டில் சந்தித்ததாகவும் கூறினார்.

அஜீத்தின் வீட்டிற்கு சென்றவுடன் அவரிடம் தான் கே.பாலசந்தரின் உதவி இயக்குனர் என்று அறிமுகப்படுத்தி கொண்டு, முதல் படம் இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் அவர் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் ஒரு தேதியை குறிப்பிட்டால் அந்த தேதியில் வந்து கதையை முழுவதுமாக சொல்லுவதாகவும் கூறினாராம்.

ஆனால் அதற்கு அஜீத் பதிலளிக்கும்போது, 'இது உங்களுடைய முதல் படம். ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும். உங்களுடைய வாழ்க்கையே இதில்தான் அடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி நீங்கள் கே.பி. சாரின் உதவியாளர் வேறு. எனவே உங்களிடம் நான் கதை கேட்க விரும்பவில்லை. நீங்கள் உடனடியாக படத்திற்காக வேலையை ஆரம்பியுங்கள்' என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார்.

அஜீத்தின் வீட்டிற்கு உதவி இயக்குனராக நுழைந்த தான், வெளியே வரும்போது இயக்குனராக வந்ததாக தன்னுடைய நினைவுகளை இயக்குனர் சரண் நினைவு கூர்ந்தார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose