கத்தி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது புலி படத்தில் நடித்து வருகிறார். பேண்டஸி படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
முதன் முதலாக விஜய் ராஜா வேடத்தில் நடிப்பதால் அவரது தோற்றத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருக்கிறார்கள். தற்போது இப்படம் பற்றி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. புலியில் விஜய் ஆக்ஷன், நடனம் மட்டுமின்றி காமெடியிலும் அசத்தியிருக்கிறாராம். இதில் விஜய்யுடன், இமான் அண்ணாச்சியும் படம் முழுக்க வருகிறாராம்.
படப்பிடிப்பு தளத்தில் விஜய் அடிக்கும் லூட்டியையும் அப்படியே ஸ்கிரிப்டில் சேர்த்து இயக்கி வருகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் புலி படம் பெரிய அளவில் பேசப்படும் என்று உறுதியளித்து வருகிறது புலி வட்டாரம்.
0 comments:
Post a Comment