மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணியின் அரை இறுதி கட்ட போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா அணி தோல்வியடைந்து இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தது.
இந்தியா தோற்றது கூட இப்ப பிரச்சனையில்லை ராம் கோபால் வர்மா அவரது ட்விட்டரில் எழுதியது தான் தற்போது தீயாக பற்றிக் கொண்டிருக்கிறது. அரையிறுதியில் இந்தியா தோற்றது எனக்கு மிகவும் மகிச்சியை தந்துள்ளது, ஏனென்றால் எனக்கு கிரிக்கெட் சுத்தமாக பிடிக்காது, அந்த 11 பேர் ஆடுவதை பார்க்க பல லட்சம் பேர் வேலைக்கு லீவ் போட்டு இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்வது எனக்கு பிடிக்கவில்லை.
ஒருவழியாக நேற்று இந்தியா தோற்றுவிட்டது. இனி மக்கள் அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவார்கள். நாட்டு மக்களின் கிரிக்கெட் என்ற மோசமான வியாதியை குணப்படுத்துமாறு, நாட்டில் உள்ள எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்கிறேன். மேலும் இனிமேல் இந்தியா ஆடும் அனைத்து ஆட்டங்களிலும் எதிரணியிடம் தோற்றுக் கொண்டே இருக்க வேண்டும். சிகரெட், குடிப்பழக்கம் இரண்டும் உடலை மட்டுமே நாசம் செய்யும், ஆனால் கிரிக்கெட் ஒட்டுமொத்த என் தேசத்தையே நாசம் செய்து கொண்டிருக்கிறது.” என்று ட்விட்டரில் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment