வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்து வந்த கிஷோர் ஆக்ஷனுடன் கூடிய ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கும் படம் ‘காதலி காணவில்லை' . அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஹார்த்திகா. இதுபற்றி இயக்குனர் ரவி ராஜா கூறியது:ஆக்ஷன், சென்டிமென்ட், காதல், காமெடி என எல்லாம் கலந்த கமர்ஷியல் அம்ச கதையாக உருவாகும் இதன் ஷூட்டிங் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு கன்டெய்னர் யார்டில் நடந்தது. நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் கிஷோர் மோதிய காட்சி படமானது. இக்காட்சி யில் சோப்ராஜ், ஹார்த்திகா, தயாரிப்பாளர் ஜி.ஆர் ஆகியோரும் நடித்தனர். தயாள் ஓஷோ ஒளிப்பதிவு. தேவா இசை’ என்றார்.
0 comments:
Post a Comment