கடந்த 2014ம் ஆண்டின் 62வது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வு குழு தலைவர் பாரதிராஜா நேற்று டெல்லியில் அறிவித்தார். இதில் தமிழ் சினிமாவுக்கு
8 விருதுகள் கிடைத்துள்ளது.நடிகர் தனுஷ் ஒண்டர்பார் பிலிம்ஸ், கிராஸ் ரூட் பிலிம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டைÕ சிறந்த குழந்தைகள் படமாக தேர்வாகியுள்ளது. இதில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் விருது பெற உள்ளனர்.‘சைவம்‘ படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகே எதுவும் அழகே‘ பாடல் எழுதிய முத்துகுமார் சிறந்த பாடலாசிரியர். அப்பாடலை பாடிய உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா சிறந்த பாடகியாக தேர்வாகியுள்ளார். மொழி வாரியான சிறந்த தமிழ் படம் ‘குற்றம் கடிதல்‘. சிறந்த துணை நடிகர் பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா). சிறந்த படத் தொகுப்பாளர் விவேக் ஹர்சன் (ஜிகர்தண்டா). சிறந்த நடிகர் விஜய் (நானு அவனல்லா - கன்னட படம்). சிறந்த நடிகை கங்கனா ரனவத் (குயின் - இந்தி படம்) சிறந்த இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி (சோதுஷ்கோன் - வங்க மொழி படம்). சிறந்த இசை அமைப்பாளர் விஷால் பரத்வாஜ் (ஹைதர் - இந்தி படம்) சிறந்த பாடகர் சுக்விந்தர் சிங். சிறந்த பொழுதுபோக்கு படம் மேரி கோம் (இந்தி). பட அதிபர் தனஞ்செயன் எழுதிய தமிழ் சினிமாவின் பெருமை என்ற புத்தகம் சிறந்த சினிமா புத்தகமாக தேர்வு செய்யப்பட்டது. வரும் மே மாதம் டெல்லியில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்குகிறார். இதே விழாவில் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட இந்தி நடிகர் சசிகபூருக்கும் விருது வழங்கப்படுகிறது.
0 comments:
Post a Comment