திரிஷா பற்றி கதைச்சாலே ஆத்திரப்படும் லக்ஷ்மிராய்.. காரணம் என்ன? இதோ பரபரப்புத் தகவல்..
அரண்மனை படத்தில் பேயாக நடித்த நேரமோ என்னவோ லட்சுமிராயை பேய் கேரக்டருக்கு என்றே பிராண்டிங் பண்ணிவிட்டார்கள். ஸ்ரீகாந்த் நடிக்கும் சவுகார்பேட்டை படத்திலும் பேயாக நடிக்கும் லட்சுமிராய் இனி பேய் வேடத்தில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சவுகார்பேட்டை படத்தின் துவக்கவிழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத்லேபில் நடைபெற்றது.
அப்போது சில பத்திரிகையாளர்களிடம் மனம்விட்டுப்பேசினார் லட்சுமிராய். பல விஷயங்களைப் பற்றி பேசிய லட்சுமிராயிடம் த்ரிஷா பற்றி கேட்டபோது செம கடுப்பாகி இருக்கிறார். அவள் ஒரு துரோகி என்கிற ரீதியில் ஆரம்பித்து த்ரிஷாவைத் திட்டித்தீர்த்துவிட்டாராம். “நட்புக்கே லாயக்கில்லாத பெண் அவள். த்ரிஷா பற்றி பேசுவதே எனக்கெல்லாம் அவமானம்” என்றெல்லாம் மனசு வெறுத்து தன் வருத்தத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார் லட்சுமிராய்.
த்ரிஷா மீது லட்சுமிராய்க்கு ஏன் இவ்வளவு கடுப்பு? த்ரிஷாவும் லட்சுமிராயும் ஒருகாலத்தில் நெருங்கிய தோழிகளாக இருந்தார்கள். தங்களின் ‘அந்தரங்க’ விஷயங்களைக் கூட பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு அன்னியோன்யமாக இருந்திருக்கிறார்கள். பட அதிபர் வருண்மணியன் லட்சுமிராய்க்குத்தான் முதலில் ‘பழக்கமாம்’. தோனி தொடங்கி லட்சுமிராயின் டார்கெட் எல்லாம் பெரிய இடங்கள்தான். அந்த அடிப்படையில் வருண்மணியன் மீது அவருக்கு ஒரு ஐடியா இருந்திருக்கிறது.
இதற்கிடையில் ஏதோ ஒரு தண்ணிப்பார்ட்டியில் முக்கால்போதையில் இருந்தபோது, வருண்மணியனை தன் பாய் பிரண்ட் என்று பலரிடம் அறிமுகப்படுத்தி வந்த லட்சுமிராய் த்ரிஷாவிடமும் வருண்மணியனை அறிமுகம் செய்து வைத்திருக்கறார். அவர் கொடுத்த இன்ட்ரோவைப் பயன்படுத்தி லட்சுமிராயிடமிருந்து வருண்மணியனை நாசூக்காகப் பிரித்து தன்னுடைய காதலராக்கிக் கொண்டாராம். ஆயிரம் கோடிக்கு அதிபதியான வருண்மணியனை தன்னிடமிருந்து த்ரிஷா தட்டிக் கொண்டுபோய்விட்ட கோபம் லட்சுமிராய்க்கு இன்னும் குறையவில்லை போலிருக்கிறது. அதனால் வறுத்தெடுத்திருக்கிறார். கண்றாவியான காதல் கதையா இருக்கே..!"
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment