ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்தில் டி.ராஜேந்தரின் தீவிர ரசிகரக நடிக்கிறாராம், ஜெயம் ரவி. டி.ராஜேந்தர் தனது படங்களில் பயன்படுத்தும் டண்டணக்கா என்ற வார்த்தையை பயன்படுத்தி ரோமியோ ஜூலியட் படத்தில் ஒரு பாடலை வைத்தனர்.
டி.இமான் இசை அமைப்பில் அனிருத் பாட, டங்கா மாரி புகழ் ரோகேஷ் எழுதிய இப்பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
தல என்றால் அஜித்குமார் தான். ஆனால் டண்டணக்கா பாடலில் டி.ராஜேந்தரை தல என்று பெருமையாகக் குறிப்பிட்டு, அந்த பாடல் முழுக்க டி.ராஜேந்தரை பெருமைப்படுத்தி உள்ளனர்.
இதற்காக டி.ராஜேந்தர் ரோமியோ ஜூலியட் பட இயக்குநரையும் ஜெயம் ரவியையும் பாராட்டி இருக்க வேண்டும். ஆனால் டி.ராஜேந்தரோ ரோமியோ ஜூலியட் படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.
அதில் டண்டணக்கா பாடலைத் தொடர்ந்து ஒலிபரப்பவும், புரொமோஷன் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளாராம். இதனால் ரோமியோ ஜூலியட் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டண்டணக்கா பாடலை படமாக்க தயாராகி வந்த ரோமியோ ஜூலியட் படக்குழுவினருக்கு சிக்கலும் ஏற்பட்டுள்ளது. டி.ராஜேந்தரின் எதிர்ப்பு காரணமாக டண்டணக்கா பாடல்காட்சியை படமாக்கும் திட்டத்தை தற்போது கைவிட்டுவிட்டனராம்.
டண்டணக்கா... என்ற வார்த்தை டி.ராஜேந்தருக்கு சொந்தமானது அல்ல, இதுதவிர அந்தப்பாடலில் அவரை இழிவுபடுத்தும்படியான வரிகளும் இல்லை. இதெல்லாம் தெரிந்தும் எம்.ஏ.தமிழ் படித்த டி.ராஜேந்தர், டண்டணக்கா... பாடலை தடை செய்ய நினைக்கிறார் என்றால் பின்னணி என்னவாக இருக்கும்? என்கிறது படக்குழு.

0 comments:
Post a Comment