விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் புலி படத்தின் படப்பிடிப்பு படுசுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தையடுத்து விஜய், அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி.தாணு தயாரிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. தற்போது இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார் அட்லி. அதோடு நடிகர், நடிகைகளின் தேர்வு செய்யும் வேலையும் ஒருபுறம் நடந்து வருகிறது.
இந்த படத்தில் ராதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதை அட்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். கமல், ரஜினி, அஜித், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ராதிகா இணைந்து நடித்திருந்தாலும் விஜய்யுடன் இணையும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடதக்கது. சமந்தாதான் இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
0 comments:
Post a Comment