விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம், கார்த்திகா நடிக்கும் படம் புறம்போக்கு. எஸ்.பி.ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, வர்ஷன் இசை அமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷன்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் இசைவெளியீட்டு விழா அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. புறம்போக்கு’ படத்தை தொழிலாளர்கள் தினமான மே-1 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக ’யுடிவி’ தனஞ்சயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடித்துள்ள மாஸ் படமும் அதே தினத்தில் தான் ரிலீஸாகவிருக்கிறது. அஜித்தின் பிறந்த நாளன்று ரிலீஸாவதால் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
0 comments:
Post a Comment