லிங்கா படத்திற்கு நஷ்ட ஈடு பெறுவது தொடர்பான விவகாரத்தில், யார் காலை யார் இழுக்கிறார்கள்… எது நடிப்பு, எது நிஜம் என்பதே தெரியாத அளவுக்கு பல ‘திரைக்கதை மன்னர்கள்’ உள்ளே புகுந்துவிட்டார்கள். பேராசை கொண்டவர்கள் சிலரும் இந்த கூட்டத்தில் இருப்பதால், பணத்தை பிரித்துக் கொள்வதில் இன்னமும் இழுபறி நீடிக்கிறது. ரஜினி சார்பாக பணம் கொடுக்கப்பட்ட பிறகும் இப்படி ஆளாளுக்கு புதையலை வேட்டையாட கிளம்பியதில், நிஜமாகவே பாதிக்கப்பட்ட சில அப்பாவிகள் கதறாத குறையாக காத்திருக்கிறார்கள்.
அதற்கு உதாரணமாக ஒரு விநியோகஸ்தர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தகவல் கசிந்திருக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்த மருத்துவமனையை லிங்கா பட விநியோகஸ்தர்கள் சூழ்ந்து வருகிறார்கள்.
திருநெல்வேலி பகுதி விநியோகஸ்தரான அய்யப்பன்தான் அவர். அந்த பகுதியில் இருக்கும் பல்வேறு தியேட்டர்களை லிங்காவுக்காக ஒப்பந்தம் செய்த இவர், அதற்காக தியேட்டர் அதிபர்களிடமிருந்து முன் பணம் வாங்கியிருந்தாராம். அவர்கள் பணத்தை திருப்பி கேட்கும்போதெல்லாம் ‘லிங்கா நஷ்ட ஈடு தொகை வந்துரும். தர்றேன்’ என்றே கூறிவந்தாராம். இதற்கிடையில் நேற்று இரவு வரைக்கும் கூட தொடர்ந்த லிங்கா நஷ்ட ஈடு பணப் பிரிப்பு விவகாரத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லையாம்.
இதனால் விரக்தி அடைந்த அய்யப்பன் விஷம் அருந்தியமாக கூறப்படுகிறது. லிங்கா விவகாரத்தில் அடுத்த ஷாக் என்னவோ?
0 comments:
Post a Comment