யுவன் ஷங்கர் ராஜா என்றாலே மாஸ் தான், அவருடைய இசையமைப்பில் கடைசியாக வந்த படம் வை ராஜா வை. அப்படத்திற்கு பிறகு எந்த ஒரு இசையை பற்றிய அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனால் யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்கு அடுத்தடுத்த மாதங்களில் செம பெரிய சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது.
சினி உலகம் யுவன் ரசிகர்களுக்காக சேகரிக்க பட்ட செய்தி இதே.
1. விரைவில் நடக்க உள்ள தமிழ் நாடு பேட்மிடன் விளையாட்டு போட்டிக்கு யுவன் ஷங்கர் ராஜா ஒரு Anthem செய்ய இருக்கிறாராம்.
2. சிம்பு மற்றும் யுவன் இருவரும் இணைந்து ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் ஒரு சிங்கிள் டிராக் மியூசிக் அல்பத்தை வருகிறார் ஏப்ரல் 14ம் தேதி வெளியிட உள்ளனர்.
3. நீண்ட நாட்களாக தள்ளிப்போய்க் கொண்டிருந்த யுவன் கான்சர்ட் மே மாதம் நடக்க இருக்கிறது.
4. இம்மாதம் இறுதியில் யாட்சன் படத்தின் பாடல் வெளியிட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ளது,அது மட்டுமில்லாமல் வை ராஜா வை உலகம் முழுவதும் ஏப்ரல் 24 ம் தேதி வெளியாக உள்ளது
5. மாஸ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மே மாதம் நடக்க இருக்கிறது.
இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து தன்னுடைய இசையினால் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்க யுவன் களமிறங்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா கேம் ஸ்டார்ட்ஸ்....
0 comments:
Post a Comment