’அட்டகத்தி’ தினேஷ் மற்றும் ‘அமரகாவியம்’ மியா ஜார்ஜ் நடிப்பில் ’ஒரு நாள் கூத்து’ என்ற புதிய படம் உருவாக உள்ளது. புதுமுக இயக்குநர் நெல்சன் இயக்கும் இபப்டத்திற்கு ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்கு இசையமைத்த ஜஸ்டின் இசையமைக்க இருக்கிறார்.
’அமரகாவியம்’ படத்திற்கு பிறகு ‘இன்று நேற்று நாளை’ படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்து வரும் மியா ஜார்ஜ் தற்போது இந்த புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
மார்ச் 30 படம் சென்னையில் தொடங்குகிறது. கிராமத்து கதையான இதில் லட்சுமி என்ற கிராமத்துப் பெண்ணாக மியா நடிக்கிறார். முக்கால்வாசி படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற இருக்கிறதாம்.
0 comments:
Post a Comment