‘என் கடன் கலை செய்து கிடப்பதே’ என்று இருக்கிறார் கமல். அவரை விட்டேனா பார் என்று துரத்திக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ‘சண்டியர்னு நான் பேர் வச்சா பொங்குறாங்க. அதுவே வேறொருத்தர் வச்சா பேச்சு மூச்சு இல்ல’ என்று கமலே கவலைப்படுகிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது நிலைமை. இந்த நேரத்தில் புது ஊசியை புஜத்தில் செலுத்த கிளம்பியிருக்கிறார் அந்த பிரமுகர். லிங்கா நஷ்ட ஈடு விவகாரத்தில் பத்து கோடி பணத்தை கொடுத்துவிட்டு ரஜினி தரப்பு ஒதுங்கிவிட்டாலும், அதை பிரித்துக் கொள்வதில் பிரச்சனை நீள்கிறது. சிங்காரவேலனுக்கு பேசியபடி 35 லட்சமும், திருநெல்வேலி மெயின் விநியோகஸ்தர் ரூபன் என்பவருக்கு 35 லட்சமும் வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற யாருக்கும் இன்னும் பணம் போய் சேரவில்லை. அவர்கள் வாங்கிக் கொள்ள வருகிற நேரத்தில்தான் குட்டையை குழப்பினாராம் அந்த பிரமுகர்.
‘லிங்காவை ஈராஸ் நிறுவனம் வாங்கியிருக்கு. நஷ்டத்துல அவங்களும் பங்கெடுத்துக்கணும். ரஜினி கொடுத்த பத்து கோடி போக, இன்னொரு பத்து கோடியை ஈராஸ்டயிருந்து வாங்கி தர்றேன். அப்படி அவங்க கொடுக்கலேன்னா ‘உத்தமவில்லன்’ எப்படி ரிலீஸ் ஆகுதுன்னு பார்க்கலாம் என்று அவர் கூறியதால், லிங்கா நஷ்டஈடு பிரித்துக் கொடுக்காமல் நிறுத்தப்பட்டதாக தகவல். அது மட்டுமல்ல, சூடோடு சூடாக உத்தமவில்லனுக்கு செக் வைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். காரணம், உத்தம வில்லன் படத்தையும் ஈராஸ் நிறுவனம்தான் வெளியிடுகிறது.
பொதுநலத்தில் சுய நலம் என்கிற டைப்பில் அவர் பேசியதை அநியாயத்துக்கு நம்பிய லிங்கா நஷ்ட பார்ட்டிகள், எக்ஸ்ட்ராவாக வரப்போகும் அந்த பத்து கோடிக்காக இப்பவே எச்சில் வழிய காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். யார் குடியையாவது கெடுக்கலேன்னா சிலருக்கு தூக்கம் வருவதில்லை. நம்ம பிரமுகரும் அப்படிப்பட்ட வியாதி இருக்கிறது போலும்.
0 comments:
Post a Comment