அந்த விடயத்தில் கறாரா நிக்கும் சோனியா...

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். சண்டிகாரில் இருந்து இறக்குமதியான இவர், அதன்பிறகு கோவில், 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை என பல படங்களில் நடித்தார். பின்னர், தன்னை தமிழில் அறிமுகம் செய்த டைரக்டர் செல்வராகவனையே 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால், 2010ல் அவரை விவாகரத்து செய்தார்.

ஆனால் அதையடுத்தும் அவர் சென்னையை காலி செய்யாமல் இங்கிருந்தபடியே வானம் படத்தில் நடிக்கத் தொடங்கியவர், ஒரு நடிகையின் வாக்குமூலம், பாலக்காட்டு மாதவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். தற்போது அச்சமென்ன என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் அவரை புக் பண்ண செல்லும சில டைரக்டர்கள் முன்பை விட சோனியாஅகர்வால் அதிக முதிர்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, தான் மாஜி ஹீரோயினி என்பதை முன்வைத்து அதிகமான சம்பளம் கேட்பதாகவும் கூறுகிறார்கள். அதனால் கேரக்டர் வேடங்களில் நடிக்க அவரை தேடிச்செல்லும் பட்ஜெட் பட நிறுவனங்கள் போன வேகத்திலேயே திரும்பிக்கொண்டிருக்கின்றன.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose