ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிவேலன் காதல் ஆகிய இரண்டு படங்களிலேயே நிகழ்கால வசூல் ஸ்டார் பட்டத்தையும், வருங்கால நம்பிக்கை ஸ்டார் பட்டத்தையும் பெற்றுவிட்டார் உதயநிதி. நமக்கு என்ன வருமோ, அதை பண்ணிட்டு போறதுதான் புத்திசாலித்தனம் என்கிற அவரது மூவ், பக்குவப்பட்ட நடிகர்களுக்கு கூட இல்லை என்பதுதான் ஆச்சர்யம். ஏப்ரல் 2 ந் தேதி ‘நண்பேன்டா’ திரைக்கு வருகிறது. ஓ.கே ஓ.கே படத்தில் அசோசியேட் டைரக்டராக வேலை பார்த்த ஜெகதீஷ் என்பவர்தான் இந்த படத்தின் இயக்குனர். அந்த படத்தில் உதயநிதிக்கு டயலாக் சொல்லித்தருவது, சந்தானம் வரமுடியாத நேரங்களில்
உதயநிதி ரிகர்சல் செய்வாரில்லையா? அப்போதெல்லாம் சந்தானத்திற்கு பதிலாக உதயநிதியிடம் வசனம் பேசி நடிப்பது என்று இந்த ஜெகதீஷ் உதயநிதியின் பிரண்ட் லிஸ்ட்டுக்குள் அசால்ட்டாக நுழைந்துவிட்டார்.
‘அந்த படத்தில் வேலை செய்யும்போதே, நல்ல கதை இருந்தா படம் பண்ணுவோம்’ என்றாராம் உதயநிதி. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதானே நல்ல ஹீரோவுக்கு அழகு? நிறைவேற்றிவிட்டார். இந்த படத்தின் தலைப்புதான் நண்பேன்டா. ஆனால் படத்தில் ஒரு காட்சியில் கூட இந்த வசனம் இடம் பெறாது என்கிறார் ஜெகதீஷ். உதயநிதிக்கு நயன்தாரா ஜோடி. ஒரே நடிகையை திரும்ப திரும்ப ஜோடியாக நடிக்க அழைப்பதால் வரும் சங்கடங்கள் உதயநிதிக்கு வந்தாலும், அதுபற்றி கேட்டால், அலட்டிக் கொள்வதில்லை.
நான் அவங்களோட ஃபேன். முதல் படத்திலேயே என்னோட சேர்ந்து நடிச்சுருக்க வேண்டியது. அப்ப முடியாமல் போயிருச்சு. ஆனால் குருவி பட காலத்திலிருந்தே அவங்களை நல்லா தெரியும்ங்கறதால, இது கதிர்வேலன் காதல் படத்தில் சேர்ந்து நடிச்சாங்க. மீண்டும் இந்த படத்தில் சேர்ந்திருக்கோம். வாழ்க்கையில் எதையும் ஐ டோண்ட் கேர்னு வாழுற ஒரு பையன், நயன்தாராவை பார்த்ததும் எப்படி மாறி பொறுப்பான பையனாகுறான் என்பதுதான் நண்பேன்டாவின் ஒரு வரி கதை என்றார் உதயநிதி.
இந்த படத்தில் ஒரு ரொமான்ஸ் பைட் இருக்கு என்று உதயநிதி சொல்வதை கேட்டால், அதென்னங்க ரொமான்ஸ் பைட் என்று கேட்காமல் போனால் உலகம் நம்மை பழிக்கும் என்பதால் அது பற்றிய விளக்கத்தை கேட்டோம். படத்துல நானும் நயன்தாராவும் லவ்வர்ஸ். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பைட் போட்டால், அதை என்னன்னு சொல்வீங்க என்றார் உதயநிதி. (சர்தான்…!)
நண்பேன்டா வுக்கு பிறகு ஒரு லவ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறாராம் உதயநிதி. ‘அதுல சந்தானம் என்னோட நடிக்கல. ஏன்னா அந்த கேரக்டருக்கு அவர் நடிச்சாலும் பொறுந்த மாட்டார். அதனால் என்னோட கருணாகரன் நடிக்கிறார்’ என்றார் உதயநிதி. ‘சந்தானம் இல்லாமலே காமெடியில் ஹோப் செய்கிற அளவுக்கு எங்க ஹீரோ தேறிட்டாரு. அதை நண்பேன்டாவில் உணருவீங்க. அப்புறம் எதுக்கு சந்தானம்’ என்றார் அருகிலேயே இருந்த ஜெகதீஷ். (ஓஹோ… அப்படி போகுதா கதை?)
0 comments:
Post a Comment