நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ரஜினி முருகன் படத்தை முடித்த கையோடு அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்க உள்ளார்.
எப்போதுமே அடுத்தடுத்து படங்கள் ஒப்புக்கொள்வதை விரும்ப மாட்டார். இது நாள் வரை ஒரு படத்தை முடித்து கொடுத்த பிறகுதான் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வரும்.
அந்த வகையில் அடுத்து அவர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பில் நடிக்கவிருந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் திடிரென்று தனது பெயரில் ( சிவகார்த்திகேயன் பிக்சர்ஸ்) ஒரு புது தயாரிப்பு கம்பெனியை தொடங்கியுள்ளார், அதில் அட்லியிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த பாக்யராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்துக்கு பாதாம் பிஸ்தா என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இந்த தடவை சமந்தாவுடன் ஜோடி சேர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment