குத்துச்சண்டை பழகி வரும் 'ஐ' நாயகி


மதராசப்பட்டணம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன், அதன் பின்னர் தாண்டவம், ஐ போன்ற தமிழ் படங்களிலும், ஒருசில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 

தற்போது அவர் தமிழில் வேல்ராஜ் இயக்கி வரும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் தனுஷுடனும், "கெத்து" படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்து வருகிறார். 

இந்நிலையில் பிரபுதேவா இயக்கத்தில் அக்சயகுமார் நடித்து வரும் "சிங் இஸ் பிலிங்'  (Singh Is Bling) என்ற படத்தில் நாயகியாக நடிக்க தற்போது நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார்.முதலில் இந்த படத்திற்கு கிரித்தி சனோன், அக்சயகுமாருக்கு ஜோடியாக  நடிக்க இருந்தார். ஆனால் எதிர்பாராத காரணத்தால் அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட 'ஐ' படத்தில் எமியின் நடிப்பை பார்த்து அசந்த இயக்குனர் பிரபுதேவா, அவரை தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டார்.

சிட்டி பெண் கேரக்டரில் நடிக்கும் எமி ஜாக்சன், இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சிக்காக குத்துச்சண்டை பழகி வருவதாகவும் பாலிவுட் செய்திகள் கூறுகின்றன. மேலும் இந்த படத்தில் முன்னாள் உலக அழகி லாரா தத்தாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தகக்து.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose