அமேஸிங் .. அருமை... "உத்தமவில்லனுக்கு"க் குவியும் ரசிகர்களின் பாராட்டு


கமலின் உத்தமவில்லன் படத்தை வெளிநாடுகளில் பார்த்த ரசிகர்கள் இணையதளத்தில் தங்களது விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர். கமல் நடித்து இயக்குநர் லிங்குசாமி தயாரித்திருக்கும் படம் உத்தமவில்லன். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். இவர்கள் தவிர கே. பாலசந்தர், விஸ்வநாத், ஜெயராம், நாசர், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், பார்வதி, பார்வதி நாயர், சித்ரா லட்சுமணன் உட்பட பலர் நடித்துள்ளனர். 

இப்படம் தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் வெளியாகிறது. சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் பெரிய படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தின் விளம்பரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமோக டிக்கெட் முன்பதிவும் நடைபெற்றது.

அவுட்ஸ்டேண்டிங்... 

அவுட்ஸ்டேண்டிங் மற்றும் எமோசனல் படம். படத்தின் கிளைமாக்ஸ் பிரமாதம் என ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

பழத்தை மட்டும் சாப்பிடுங்கள்... 
படத்தில் சிலப்பல குறைகள் இருந்தாலும் விதைகளைத் தூக்கிப் போட்டு விட்டு பழத்தை மட்டும் சாப்பிடலாம் என ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தைப் பார்த்தால் நிச்சயம் உங்கள் கண்கள் குளமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

‘நச்’ கிளைமாக்ஸ்... 

உலகநாயகன் அவருடைய ஸ்டைலைப் படத்தில் காட்டியுள்ளார். டீசண்டான முதல்பாதி, இரண்டாம் பாதியில் சற்று வேகம் குறைந்தாலும், கிளைமாக்சில் எழுந்து நின்று கை தட்டாமல் இருக்கவில்லை என சபாஷ் கூறியுள்ளனர் ரசிகர்கள்.

கே.பி. சார் பிரமாதம்... 
இயக்குநர் கே.பாலசந்தர் நடித்த கடைசிப் படம் இது என்பதால் அவரையும் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். அதேபோல் ஊர்வசி, நாசர், எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பும் பிரமாதம் என பாராட்டியுள்ளனர்.

இசை பிரமாதம்... 

இசை பிரமாதம் ரகம் எனப் பாராட்டியுள்ள ரசிகர்கள் சிலர், பூஜாகுமாரின் நடிப்பு சொல்லிக் கொள்வது போல் இல்லை என விமர்சித்துள்ளனர். செஞ்சுரிகளைக் கடந்து நடக்கும் கதையில் கமலின் இரட்டை வேடம் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை அபாரம் எனப் பாராட்டியுள்ளனர்.

முதல்பாதி பிரமாதம்... 

படத்தின் முதல் பாதி பிரமாதமாக இருப்பதாகவும், 2ம் பாதியில் விறுவிறுப்பு குறைவாக இருப்பதாகவும், அதேசமயம், கிளைமேக்ஸ் படத்தை தூக்கி நிறுத்தியிருப்பதாகவும் கஷாயம் வித் பாஸ்கி என்பவர் கூறியுள்ளார்.

நாசரும் சூப்பர்... 

உத்தமன் என்பவர் கூறுகையில், நாசர் அட்டகாசமாக நடித்துள்ளார். கமல்ஹாசன் வழக்கம் போல நடிப்பில் பிரமாதப்படுத்தியுள்ளார். இருவருக்கும் மிகப் பிரமாதமான பாத்திரங்கள் என்று பாராட்டியுள்ளார்.

கிளாஸ் படம்... 

சாதிக் பாட்ஷா என்பவர் கூறுகையில், உத்தமவில்லன் கிளாஸ் படம். பிரில்லியன்ட் நடிப்பு அமேசிங் பின்னணி இசை. எந்தத் தவறும் கண்டுபிடிக்க முடியாது. இன்னொரு முறை பார்க்க வேண்டும் போல் உள்ளது என்று கூறியுள்ளார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose