கலிபோர்னியாவில் தலைவிரித்தாடும் வறட்சி: குளிக்காமல் கப்பு அடிக்கும் ஹாலிவுட்
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கலிபோர்னியா மாநிலத்தில் பிரபலங்கள் குளிப்பதை குறைத்துக் கொண்டு, முடிந்த அளவுக்கு தண்ணீர் பயன்பாட்டை குறைத்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் தண்ணீர் பயன்பாட்டை 25 சதவீதம் குறைக்குமாறு கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். தண்ணீரை வீணாக்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பெவர்லி ஹில்ஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகர் கர்ட் ரஸ்ஸல் தனது திராட்சை தோட்டத்தில் உள்ள செடிகளை அருகருகே நட்டு வைத்துள்ளார். இதன் மூலம் தண்ணீர் பயன்பாட்டை குறைக்கலாம் என்று அவர் அவ்வாறு செய்துள்ளார்.
ஹாலிவுட் நடிகை கேமரூன் டியஸும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஷேரன் ஆஸ்பர்னும் சிறுநீர் கழித்தால் டாய்லெட்டை ஃபிளஷ் செய்ய மாட்டார்களாம். இரண்டுக்கு போனால் மட்டும் தான் ஃபிளஷ் செய்வோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹாலிவுட் நடிகர் ஆர்லான்டோ ப்ளூம் கூறுகையில், தண்ணீரை மிச்சப்படுத்த நான் சில சமயம் ஒரு வாரம் துவைக்காமல் ஆடை அணிகிறேன். மேலும் குளிப்பதையும் குறைத்துக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியன் நீரை சேமிக்க 5 நாட்களுக்கு ஒரு முறை தான் தலைக்கு குளிக்கிறாராம். நடிகை கிறிஸ்டன் பென் தண்ணீரை மிச்சப்படுத்த 7 நாட்களுக்கு முகத்தை கழுவுவதை நிறுத்தியுள்ளாராம்.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment